ஒரு விசுவாசி எப்படி வளருவது செய்ய வேண்டிய பயற்சி என்ன ?
செபத்தின் வகைகள் என்ன செப வாழ்க்கையில் ஒரு விசுவாசி எப்படி வளருவது செய்ய வேண்டிய பயற்ச்சி என்ன ?
நீ என் மகன் நான் உனது தகப்பன்
என் அன்பு மகனே ஏன் கலங்குகிறாய் உன்னை நான் உன் தாயின் கருவில் இருக்கும் போதே பெயர் சொல்லி அழைத்தேன். ஏன் என் உள்ளங்கையில் உனது பெயரை எழுதி வைத்திருக்கிறேன். உனக்காகவே எனது அத்தனை மகிமையையும் துறந்து வானில் இருத்து இறங்கி வந்தேன் . உன் பரம்பரை பரம்பரையாக மற்றும் உங்களில் பிறக்கவிருக்கும் மனிதர்கள் அனைவரது பாவங்களையும் ஒரு மனிதனுக்குரிய பலவீனத்தோட சுமந்து தீர்த்தேன். அதனால் உனக்கு ஏற்படும் சகல வாதைக்கும் நான் பூமியில் இருக்கும் போது எனக்கும் ஏற்பட்டவையே அவ்வாதைகள் உனக்கும் ஏற்பட்டதைவிட பலமடங்காக எனக்கு ஏற்பட்டது என் மகனே , எனவே உனது துன்பங்களை நான் அறிவேன் . நான் உனக்காக பரிதவிக்கிறேன் . நீ என்னை ஏற்றுக் கொள் மறுதலித்து தூசிக்கும் போதும் நான் உன்னை அன்பு செய்கிறேன். நான் பரலோக மகிமையில் இருந்து கொண்டும் வெறுமனே உன்னை அன்பு செய்கிறேன் என்று வாயின் வார்த்தையாய் சொல்லாமல், பரலோக மகிமையைவிட்டு இறங்கி வந்து சகல விதத்திலும் மனிதரைப் போல் ஆகி உனக்காக மாகா வியாகுலப்பட்டு, சிலுவையில் இரத்தம் சிந்தி மரித்து சகலத்தையும் ஆயத்தம் பண்ணிவிட்டே உம்மை அன்பு செய்கிறேன். என் அன்பை புரிந்து கொள் மகனே! உன் பாவங்கள் எவ்வளவு பெரியதாய் இருந்தாலும் அதை நான் பார்ப்பதில்லை. காரணம் நீ என் மகன் நான் உனது தகப்பன் எனவே தான் நான் உனக்காக அனைத்து பாவ பரிகாரம் செய்தேன் .உனக்காக என் உயிரையும் கொடுத்தேன் . நீ என்அன்பை புரிந்து, என் இரக்கத்தை புரிந்து கொள்ள வேண்டும் என்பதையே நான் உனக்காக ஏங்கி காத்திக்கிறேன். நான் உனக்காக அழுகிறேன். நான் உனக்காக பரிதவிக்கிறேன். மனம் மாறு மகனே என் அன்பை புரிந்து கொள் பாவத்தை அறிக்கையிடு, என்னையன்றி உலக்கத்திலே யாரும் பாவத்தில் இருந்து விடுதலை அளிக்க முடியாது. வேத புத்தகத்தை வாசி என் மகனே! அதை வாசிக்க வாசிக்க என் ஆவி உன் மேல் தங்கும். நான் நியாயம் தீர்க்க வரும் முன் நீ மனம்மாறி என் தண்டனைக்கு நீ தப்ப வேண்டும். என நான் விரும்புகின்றேன். எனவே விரைவாக பாவங்களை அறிக்கையிட்டு மனமாறு மனமாறு காலம் சமீபம் இனி காலம் செல்லாது .
உலகின் சமாதனம் என்ன என்பது இலங்கை தமிழர் விடயத்தில் நிரூபணம் ஆகின்றது.
இந்த நூற்றாண்டில் இடம் பெற்ற மிக கொடூரமான இன அழிப்பு என்றால் இலங்கை தமிழ் இன அழிப்பை குறிப்பிடலாம். தமிழ் இன அழிப்பு இடம் பெற்ற வேளை ஐநா சபையும் இந்தியாவை ஆளும் அரசும் ஏன் உலகமே வேடிக்கை பார்த்தது. போர் முடிந்தது என இலங்கை அரசு அறிவித்ததும் அனைத்து நாடுகளும் இலங்கை அரசை புகழ்ந்ததுடன் இலங்கையில் நிரந்தர சமாதானம் நிலவுகின்றது எனவும் இலங்கை தமிழர் மிக சந்தோசமாக வாழ்கின்றனர் என கூறிவருகின்றனர் .ஆனால் அங்கோ ஐந்து தமிழருக்கு ஒரு இராணுவம் என கண்காணிக்க படுவதுடன் பல அடக்குமுறை இடம்பெற்று வருவது அனைவரும் அறிந்த உண்மை . அதானால் தான் அன்று ஜேசு கூறினார்
யோவான் 14:27 சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன், என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்; உலகம் கொடுக்கிறபிரகாரம் நான்உ ங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலுமிருப்பதாக.
இவ் வசனத்தின் இறுதில் உலகம் கொடுக்கிறபிரகாரம் நான்உங்களுக்குக் கொடுக்கிறதில்லை என்று ஜேசு அன்று கூறியது மிக சரியனதே. உலகின் சமாதனம் என்ன என்பது இலங்கை தமிழர் விடயத்தில் நிரூபணம் ஆகின்றது. எனவே சமாதானத்தின் இறைவனிடம் இலங்கை தமிழர் விடயத்தில் மறைக்க பட்ட உண்மைகள் வெளிவரவும் தமிழர்கள் மன விருப்பத்தின் படி நிலையான சமாதானம் கிடைக்க வேண்டுவோம்
தேவன் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக! ஆமென்
ஜெபத்தோட்ட ஜெயக்கீதங்கள் vol 13 இல் இருந்தது
கட்டிப் பிடித்தேன் உந்தன் பாதத்தை
கண்ணீரால் நனைக்கின்றேன் கர்த்தாவே
இலங்கையிலே யுத்தங்கள் ஓய வேண்டுமே
இளைஞரெல்லாம் இயேசுவுக்காய் வாழ வேண்டுமே
இரங்கும் ஐயா மனம் இரங்குமையா
1. துப்பாக்கி ஏந்தும் கைகள்- உம்
வேதம் ஏந்த வேண்டும்
தப்பாமல் உம் விருப்பம்
எப்போதும் செய்ய வேண்டும்
2. பழிக்கு பழி வாங்கும்(எபி 10:30)
பகைமை ஒழிய வேண்டும்
மன்னிக்கும் மனப்பான்மை (எபே4:32)
தேசத்தில் மலர வேண்டும்
3. பிரிந்த குடும்பமெல்லாம்
மறுபடி இணைய வேண்டும்
பெற்றோரின் கண்ணீர் எல்லாம்
களிப்பாய் மாற வேண்டும்
4. வீடு இழந்தவர்கள்
இடங்கள் பெயர்ந்தவர்கள்
மறுவாழ்வு பெற வேண்டும்
மகிழ்ச்சியால் நிரம்ப வேண்டும்
அருளின் வடிவம்
உம்மைக் கண்டாலே என்றும் ஆனந்தமையா
உம்மை புகழ்ந்தால் என் நாவு இனிமையாகும்
உன் வழி சென்றால் என் கால்கள் தாளரவில்லை
உம்மை நினைத்தால் என் நினைவுகள் நிறைவாகிறது
என் கைகள் உம்மையே வேண்டி நிற்கிறது
அன்பு உள்ளம் கொண்டவரே
அருளின் வடிவம் கொண்டவரே
அருளின் வடிவம் கொண்டவரே
அன்பாய் என்னைக் காப்பவரே
ஆறுதல் எனக்குத் தருவபரே
ஆறுதல் எனக்குத் தருவபரே
அவனியில் உம் அன்புக்கு நிகர் யாரு?
ஜேசு சாமி என்ற ஒருவர் இருக்கிறார்
உன் திராணிக்குமேலே சோதிக்கமாட்டேன்
சஞ்சலம் நிறைந்த வாழ்விலும்,சங்கடம் மலிந்த உலகிலும்,ஒவ்வொரு மனிதனையும் துயரத்தில் ஆழ்த்தி துயரப்படுத்தும் இவ்வேளையில், எரிகின்ற வீட்டில் புடுங்குவது போலவும், மதிலால் விழ்ந்தவனை மாடு ஏறி மிதிப்பது போலவும், பலர் மேலும் மேலும் கடினமான வார்த்தைகளாலும், தீய வார்த்தைகளாலும், ஏசி உங்களை விரக்த்தியின் விளிம்புக்குக் கொண்டு போகலாம். இதற்கு முதற் காரணம் ஒவ்வொரு மனிதனின் தனிமை உணர்வு எனக்காக யாருமே இல்லையே! நான் சொல்வதை யாரும் கேட்கவில்லையே , எல்லோரும் எனக்கு தீமையே செய்கின்றனர். நன்மை செய்ய எவருமே இல்லையே, என்ற எண்ணமே, எந்த மனிதனையும் விரக்த்தியின் விளிம்புக்கு கொண்டு போகிறது.
சஞ்சலம் நிறைந்த வாழ்விலும்,சங்கடம் மலிந்த உலகிலும்,ஒவ்வொரு மனிதனையும் துயரத்தில் ஆழ்த்தி துயரப்படுத்தும் இவ்வேளையில், எரிகின்ற வீட்டில் புடுங்குவது போலவும், மதிலால் விழ்ந்தவனை மாடு ஏறி மிதிப்பது போலவும், பலர் மேலும் மேலும் கடினமான வார்த்தைகளாலும், தீய வார்த்தைகளாலும், ஏசி உங்களை விரக்த்தியின் விளிம்புக்குக் கொண்டு போகலாம். இதற்கு முதற் காரணம் ஒவ்வொரு மனிதனின் தனிமை உணர்வு எனக்காக யாருமே இல்லையே! நான் சொல்வதை யாரும் கேட்கவில்லையே , எல்லோரும் எனக்கு தீமையே செய்கின்றனர். நன்மை செய்ய எவருமே இல்லையே, என்ற எண்ணமே, எந்த மனிதனையும் விரக்த்தியின் விளிம்புக்கு கொண்டு போகிறது.
நண்பனே உனக்காகப் பரிதாபப்படவும், உனக்காக இரக்கப்படவும், ஏன் உனக்காக தனது உயிரையே உனக்காகக் கொடுத்த ஜேசு சாமி என்ற ஒருவர் இருக்கிறார்
.'' என் உள்ளங்கையில் உனது பெயரை எழுதி வைத்திருக்கின்றேன்'' என்கிறார். ஜேசு ''முதல் தரமான ஆடையைக் கொண்டு உடுத்துங்கள். இவனுடைய கைக்கு மோதிரமும் ,காலுக்கு மிதியடியும், அணியுங்கள் கொளுத்த கன்றைக் கொண்டுவந்து அடியுங்கள். நாம் மகிழ்து விருந்து கொண்டாடுவோம்
ஏனெனில் என் மகன் இவன் இறந்து போயிருந்தான் மிண்டும் உயிர் பெற்று வந்திருகின்றான் . காணாமல் போயிருந்தான். மிண்டும் கிடைத்துள்ளான்'' என்கிறார் ஜேசு சாமி (காண்க லூக்கா அதிகாரம் 15:வசனம் 22-25 ) ஜேசு மீது விசுவாசம் கொண்டு ஏற்றுக் கொண்டால் போதும். அவர் சகலதையும் பார்த்து கொள்வார் . உங்களது தேவைகளுக்காக எப்படி செபிப்பது என்று உங்களுக்குத் தெரியாமல் இருக்கலாம். அதற்காக நீங்கள் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. அதற்கு இரண்டு தளம் உள்ளது.
1) இத்தளத்தில் நீங்கள் Skype மூலம் இந்திய நேரப்படி சாயுங்காலம் 7 pm to 9pm வரை தந்தை அவர்களை தொடர்பு கொள்ளலாம் அத்துடன் ஜெப அறையில் நீங்களும் செபித்து உங்களது தேவைகளை பெற்று கொள்ளுங்கள் இந்த ஜெப அறையில் எப்பொதும் நீங்கள் தனிமையில் இல்லை. இரவு பகல் இருபத்து நான்கு மணி நேரமும், இந்த அறையில், உங்களோடு, ஒரு கூட்டம் ஊழியர்கள், நோன்பிருந்து ஜெபிக்கிறார்கள். அவர்களது பலியாகும் ஜெபம், இந்த அறையிலிருந்து, விண்ணை நோக்கி, எழும்புகிறது. எனவே நீங்கள் தனியாகவில்லை அத்துடன் இந்த தளத்தில் வடிவமைப்பு என்னை பிரமிக்க வைத்ததுடன் உண்ணர்வை தளத்துடன் ஒன்றிக்க வைக்கின்றது link http://www.catholicpentecostmission.in/prayer_room.html
2) இத்தளத்தில் உங்களது செபத்தேவை என்ன என்பதை தெரிவு செய்து அந்த சகோதரன் செபிக்கும் போது நீங்களும் விசுவாசத்துடன் செபித்து அற்புதத்தை பெற்றுக் கொள்ளுங்கள் இத்தளத்தில் Tamil — > Bro. Appadurai — > go என்பதை கிளிக் பண்ணவும் link http://www.prayermountain.in/Home/Audio_Prayer.php
இரண்டு தளங்களில் உங்களுக்கு விரும்பியதில் இணைத்து அற்புதத்தை பெற்று கொள்ளுங்கள் உங்களை கத்தர் ஜேசு நிறைவாக ஆசிர்வதிப்பாராக. ஆமென்